ஆசிய ஜனநாயகத் தலைவர்கள் கூட்டணியின் மலேசியாவிற்கான பிரதிநிதியானார் KAREN KASTURI!
- Thinagaren Sanggaren
- 24 Oct, 2025
அக்தோபர் 24,
ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் ஜனநாயகத் தலைவர்கள் கூட்டணியில் (ADLA) மலேசியாவுக்கானப் பிரதிநிதியாகப் பி.கே.ஆரின் KAREN KASTURI தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Asian Democratic Leaders Alliance எனப்படும் ஆசிய நாட்டுத் தலைவர்கள் அரசியல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டணியாக விளங்குகிறது. ஆசிய நாடுகளில் ஜனநாயகத்தின் மீறல் ஏற்படாது அந்நாட்டின் ஆட்சி விளங்குவதை உறுதிப்படுத்தும் ஒரு கூட்டமைப்பாக Asian Democratic Leaders Alliance திகழ்கிறது.
கடந்த அக்தோபர் 22, சிங்கப்பூரில் நடைபெற்ற Konrad Adenauer Stiftung Young Political Leaders Caucus (KASYP) 15 ஆவது நிறைவு விழாவில் மலேசியாவுக்கான ஜனநாயகத் தலைவராக KAREN KASTURI தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு முதல் 2028 வரையில் KAREN KASTURI இந்த பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, கஜகஸ்தான், தைவான், திமோர்-லெஸ்டே என 14 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு இந்த Asian Democratic Leaders Alliance செயல்படுகிறது.
ஆசிய நாடுகளில் ஜனநாயகத்துவ மீறல் இல்லாது இருக்கவும் மக்களாட்சியை உறுதிப்படுத்தவும் சமூகவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையன அரசியல் கொள்கையைக் கொண்ட ஓர் ஆட்சி அமைக்கப்படுவதையும் தேர்தல் முறையில் அமைக்கப்படும் ஆட்சியில் ஒருமைப்பாட்டையும் நிலையானப் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துவதை இந்த Asian Democratic Leaders Alliance உறுதிப்படுத்தும். பி.கே.ஆர் கட்சியின் தேசிய மகளிர் பிரிவின் துணைப் பொருளாளராகவும் கூட்டரசு வளாகப் பி.கே.ஆர் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருக்கும் கரேன் கஸ்தூரி தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக் கழக அமைச்சின் மேனாள் துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



