கிள்ளான் லிட்டில் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கரி! ஓம்ஸ் பா.தியாகராஜன் திறந்து வைத்தார்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், அக் 3: கிள்ளான், தெங்கு கிளானா லிட்டில் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கரியின் புதிய கிளை திறப்பு விழா கண்டது.

இதனை ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா. தியாகராஜன், டத்தோ டி.மோகன் உடன் இணந்து அதிகாரப்பூர்வமாகத் திறந்த வைத்தார்.

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், சிலாங்கூர் தமிழ்ச்சங்கத் தலைவர் சேகரன், மலேசியக் கலை பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய விருந்தினராக தமிழக திரைப்பட நடிகர் பிரேம்ஜி கலந்துகொண்டு, மெட்ராஸ் பேக்கரியின் கட்டிங் டீ அருமையாக இருப்பதாக உற்சாகத்தோடு தெரிவித்தார்.

சிறப்பான உள் கட்டமைப்பில் வசீகரிக்கும் இந்த பேக்கரியில் விதவிதமான பலகாரங்கள். இனிப்பு வகைகள், மணம் நிறைந்த தேநீர், கேக், பஃப்ஸ் என இதமான சுவைகளில் விதவிதமான பேக்கரி ஐட்டங்கள் மனதைக் கவர்கின்றன. மேலும் அனைத்து வகையான ஜூஸ்களும் பிரத்தியேகமாக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.

கடையின் உரிமையாள் டெனேஷ் குமார், அவரது துணைவியார் மற்றும் கடை நிர்வாகி புர்கான் ஆகியோர் இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

கிள்ளானில் சிறப்பான தேநீர் நேரத்தை அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு மெட்ராஸ் பேக்கரி சரியான தேர்வாக இருக்கும் என்கின்றனர் வந்திருந்து அனுபவித்து மகிழ்ந்தவர்கள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *