பி.கே.ஆர் தேர்தலில் 280 புகார்கள்! அனைத்தும் விசாரிக்கப்படும்!

top-news

மே 18,

நடந்து முடிந்த பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் பல்வேறு புகார்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 280 புகார்கள் கிடைக்க பெற்றிருப்பதாக பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் குழு தலைவரும் அமைச்சருமான Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். எல்லா துணைத் தலைவர் வேட்பாளர் Datuk Seri Rafizi Ramli பி.கே.ஆர் கட்சித் தேர்தல் குழப்படியாக நடந்ததாகத் தெரிவித்திருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் மறுத்தார். தேர்தலிந் போது அவரும் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராகவே இருந்தார். பிரச்சனைகள் எழுந்த போது Datuk Seri Rafizi Ramli உட்பட கட்சியின் தலைமைக்கு முழுமையான விளக்கத்தைத் தாம் அளித்ததாகவும் பிரச்சாரத்தில் பேசுவதற்காக ஆராயாமல் பேச கூடாது என்றும் Datuk Seri Dr Zaliha Mustafa நினைவூட்டினார்.

கட்சித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பதைக் கட்சியின் தலைமைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது, தேர்தலுக்கு முன்னமே இது குறித்து முழுமையான விளக்கம் வழங்கப்பட்டது. ஆனால் கட்சியின் தொகுதித் தேர்தலில் எழுந்திருக்கும் பிரச்சனைகளும் புகார்களும் தேர்தல் முறைமை சார்ந்தது அல்ல என்றும் வேட்பாளார்களுக்கிடையே நடந்த கருத்து முரண்கள் என்றும் உறுப்பினர்கள் எனும்போது தேர்தல் நடவடிக்கைக் குழு முறையான விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுத்திருப்பதையும் Datuk Seri Dr Zaliha Mustafa குறிப்பிட்டார்.

Sebanyak 280 aduan diterima berkaitan pemilihan cabang PKR. Datuk Seri Dr Zaliha Mustafa menegaskan semua aduan akan disiasat dan menolak dakwaan Rafizi Ramli berkenaan penyelewengan, sambil mengingatkan agar tidak membuat tuduhan tanpa bukti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *