ரயில் பழுது! தண்டவாளத்தில் நடந்து வந்த பயணிகள்! அந்தோணி லோக் பதவி விலகும்படி பெரிக்காத்தான் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 28,

KLIA Aerotrain ரயில் பாதி வழியில் பழுதடைந்து நின்றதால் ஆபத்தான தண்டவாளத்தில் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் நடந்து வந்த சம்பவம் நாட்டின் பொது போக்குவரத்து துறையின் மெத்தனத்தைக் காட்டுவதாகப் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் WAN AHMAD FAYHSAL கண்டனம் தெரிவித்துள்ளார். இருட்டில் பயணிகள் தண்டவாளத்தில் சுமார் 200 மீட்டர் வரையும் குழந்தைகளுடன் நடந்து வந்திருப்பதாக WAN AHMAD FAYHSAL தெரிவித்தார். 

அன்வார் வெளிநாட்டினர்களுடன் நடனம் ஆடுகிறார், அந்தோணி லோக்கைக் காணவில்லை, டி.ஏ.பியின் அமைச்சர் சர்ச்சைகளின் போது மறைந்து விடுகிறார். கொண்டாட்டங்களின் போது முன்னே நிற்கிறார். இப்படியான பொறுப்பற்ற அமைச்சர் பதவி விலக வேண்டும் என WAN AHMAD FAYHSAL வலியுறுத்தினார். இன்று நள்ளிரவு இச்சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் நண்பகல் 1 மணிவரையும் போக்குவரத்து அமைச்சு இது குறித்து எந்தவோர் அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதை WAN AHMAD FAYHSAL சுட்டிக்காட்டினார். இது முதல் முறை அல்ல, தண்டவாளத்தின் நடுவே ரயில் நின்றால் அது பெரிய அளவிலான அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் மெத்தனமாக இருக்க கூடாது என WAN AHMAD FAYHSAL தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *