மலேசிய கால்பந்து சங்க விவகாரம் தொடர்பில் அறிக்கைகளில் கவனம் அவசியம்-: ஏஎப்சி எச்சரிக்கை

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ, 21-

மலேசிய கால்பந்து சங்கம் நிர்வாகத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு, குறிப்பாக அரசாங்கம் தலையிடுவதாகக் கருதப்படும் வகையில் கருத்து தெரிவிப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஏஎப்சி பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ விண்ட்ஸர் பால் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியக் கால்பந்து சங்கம் தற்போது பிபா முடிவுகளால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்தாலும், அரசாங்கம் அல்லது அமைச்சகம் எப்ஏஎம் நிர்வாகிகளை பதவி குறித்து நேரடியாக உத்தரவிடவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது என்று தெரிவித்தார்.

எப்ஏஎம் நிர்வாகிகள் இணை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே அவர்களை விலகச் சொல்வது சங்கத்தின் சுயாட்சித் தன்மைக்கு எதிரானது. இது தலையீடாகக் கருதப்பட்டால், மலேசிய கால்பந்து சங்கம் பிபாவால் இடைநீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்று விண்ட்ஸர் எச்சரித்தார்.

எப்ஏஎம் தற்போது உள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் எந்தக் கருத்தும் தவறுதலாக விளங்கப்பட்டு, நாட்டின் அனைத்துலக கால்பந்து நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், அரசு, அமைச்சர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஏஎப்சி வலியுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *