பாதுகாப்பான இணையம்-சிலாங்கூர் - கோலாலம்பூரில் உள்ள 107 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்பு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப். 12-

மலேசிய தொடர்பு. பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) ஏற்பாடு செய்த பாதுகாப்பான இணையம் எனும் பிரச்சாரத்தில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள மொத்தம் 107 தேசிய வகை தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்றன.இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வில் தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய இப்பிரச்சாரம் நேற்று தொடக்கம் கண்டது.

பாதுகாப்பான இணைய பயன்பாடு, இணைய அச்சுறுத்தலின் அபாயங்கள் மற்றும் முறையான இணைய பயன்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே அதிகரிப்பதும் இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 214 பேர், அந்தந்த பள்ளிகளில் இணைய பாதுகாப்பு செய்திகளை வழங்குவதற்கும் பாதுகாப்பான இணைய பயன்பாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *