ரஃபிஸி - நிக் நஸ்மியின் உறுப்பினர் அந்தஸ்து பறிக்கப்பட்டது! - PKR அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 17: தங்கள் நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்ததைத் தொடர்ந்து, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி மற்றும் சித்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோரின் உறுப்பினர் பதவியை பிகேஆர் கட்சி ரத்து செய்துள்ளது.

இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்துவிட்டு பிகேஆர் கட்சியை விட்டு வெளியேறும் எண்ணத்தை அறிவித்த உரைகளின் ஒலிப்பதிவுகள் கட்சியிடம் உள்ளதாக பிகேஆர் பொதுச்செயலாளர் ஃபுசியா சல்லே தெரிவித்தார்.

PKR அவர்களின் அறிவிப்பை ஏற்றுக்கொள்கிறது. மேலும் கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 9(1)(c)-இன் கீழ், அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த தருணத்திலேயே அவர்களின் உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனால், அந்த நாடாளுமன்ற இருக்கை காலியாகிவிடும் என்று கூறும் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 49A(1)(a)(ii)-க்கு இந்த அறிவிப்பு தெளிவாக இணங்குகிறது என்று அவர் நேற்று மாலை ஓர் அறிக்கையில் கூறினார்.

 நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துலுக்கு இது தொடர்பாக விவரங்களைஅனுப்புவதாகவும், அவர் கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் அவர்களின் நாடாளுமன்ற அந்தஸ்தைத் தீர்மானிப்பார் என்றும் கூறினார்.
நேற்றைய அறிவிப்பின்போது உடனிருந்த கட்சியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் அந்தஸ்தையும் PKR மறுபரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *