ரஃபிஸியின் மகன் ஊசியால் குத்தப்பட்ட சம்பவம்-தாக்குதல் நடத்தியவன் இன்னும் அடையாளம் காணப்படவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 18-

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் பன்னிரண்டு வயதான மகன் ஒரு மாதத்திற்கு முன்னர் தாக்கப்பட்டார். ஆனால், தாக்குதல் நடத்திய நபர் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்தாக்குதலைச் சித்திரிக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் கிடைத்திருந்தாலும், தாக்குதல் நடத்திய நபர் யார் என்பதை இன்னும் உறுதிப்படுத்த இயலவில்லை என்று தேசியப் போலீஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியொன்றில்
ஆகஸ்டு 13ஆம் தேதியன்று ரஃபிஸியின் மகன் குழல்ஊசியால் குத்தப்பட்டார். அந்த ஊசியில் குழலுக்குள் ஆபத்தான திரவம் எதுவும் இருந்ததா என்பது குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது என்றும் காலிட் நேற்று குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தப்படுவற்கு முன்பு தமது மனைவியும் மகனும் பயணம் செய்து கொண்டிருந்த காரை இரண்டு ஆடவர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என்று ரஃபிஸி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *