ரஃபிஸியின் கூற்று தவறானது! - சைஃபுடின் நசுத்தியோன்

top-news
FREE WEBSITE AD

 புத்ராஜெயா, மே 13: துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸ்ஸா தோல்வியடைந்தால் அது கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை மோசமாகப் பாதிக்கும் என்ற ரஃபிஸி ரம்லியின் கூற்றை பிகேஆர் முன்னாள் பொதுச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் இன்று நிராகரித்தார்.

அன்வாருக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதுதான் கட்சி இருப்பதற்குக் காரணம் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் கூறினார். ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகளுக்காக அவர் சுமார் 11 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நூருல் இஸ்ஸா வெற்றி பெற்றால் அதை அன்வாருக்கு ஆதரவளிக்கும் அடையாளமாகவோ அல்லது தோல்வியடைந்தால் அன்வாரை நிராகரிப்பதாகவோ தாம் பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.

இது ரஃபிஸிக்கும் நூருல் இஸ்ஸாவுக்கும் இடையிலான போட்டி மட்டுமே, என்று அவர் உள்துறை அமைச்சகத்திற்கான மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

Saifuddin Nasution menolak dakwaan Rafizi bahawa kekalahan Nurul Izzah menjejaskan imej Anwar. Beliau berkata, sejarah Anwar membentuk PKR. Kemenangan atau kekalahan Nurul tidak mencerminkan sokongan terhadap Anwar. Ia hanyalah persaingan antara dua calon.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *