மலேசிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை– ஸ்டீவன் சிம்

top-news

கோலாலம்பூர், ஜன. 20-

மலேசியாவில் தயாரிக்கப்படும் உள்ளூர்  தயாரிப்புகளுக்கு அரசுத் துறைகள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என, தொழில் முனைவோர், கூட்டுறவு வளர்ச்சி அமைச்சு (KUSKOP) வலியுறுத்தியுள்ளது.

அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறியதாவது, அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளும் , அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான நினைவுப் பரிசுகளில், மலேசிய தயாரிப்புகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிராண்டுகள் அதிக மதிப்புடையவை என்ற எண்ணத்தில் வழங்கப்படும் நினைவுப் பரிசுகள், தரத்தில் ஒப்பிடத்தக்க உள்ளூர் மாற்றுகள் இருந்தால் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“முதலில் நாமே நம்பிக்கை காட்ட வேண்டும். நமது தயாரிப்புகளில் நமக்கே நம்பிக்கை இல்லையெனில், உலக சந்தையில் மற்றவர்கள் எவ்வாறு நம்புவார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நடவடிக்கை, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ‘மேட் இன் மலேசியா’ என்ற அடையாளத்தை உலகளவில் வலுப்படுத்தும் என அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *