இஸ்ரேலில் 27 மலேசியர்களின் கைது! மாமன்னர் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 3,

மலேசியாவின் 27 பேர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரதமர் அன்வார் மாமன்னரை நேரில் சந்தித்து Global Sumud Flotillaவின் பங்கேற்றிருக்கும் மலேசியர்களை இஸ்ரேல் கைது செய்திருப்பது தொடர்பாக விளக்கமளித்தார். 

இச்சந்திப்பில் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail பிரதமர் அன்வாருடன் கலந்துகொண்டார். பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருள்களைக் கொண்டு சென்றுள்ளதை மாமன்னர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாடுகளுடன் இது குறித்து கலந்துரையாடி மலாய் ஆட்சியாளர்கள் மூலமாகவும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவிருப்பதாகவும் மலேசியர்கள் மீண்டும் பாதுகாப்பாகத் தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மாமன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *