பொது ஊழியரகள் ஒருமைப்பாடு, நம்பிக்கையை பேண அறிவுரை - மாமன்னர்

top-news

கோலாலம்பூர், ஜன. 8-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அனைத்து பொது ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். அவர்கள் தங்கள் பணிகளை நிறைவேற்றும்போது எப்போதும் ஒருமைப்பாடு (இன்டெக்ரிட்டி), நம்பிக்கை ஆகியவற்றை பேண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது மக்கள், நாட்டின் நலனுக்காகவே என்று கூறினார்.

அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட செய்தியில், பொது ஊழியர்கள் நாட்டின் நிர்வாகத்தின் முதன்மையான தூண்கள் என்றும், அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

மாமன்னர் மேலும், பணி கலாச்சாரத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, திறன் ஆகிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்ற எந்தவொரு செயலையும் நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவை அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்று எச்சரித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *