பாதுகாப்பு கட்டுப்பாட்டை பகாங் மாநில போலீஸ் பலப்படுத்தும்!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், ஜூன் 4-

அடுத்த வாரம், பகாங்கில் நடைபெறவிருக்கும் 2025   அபாயகர போதைப் பொருள் தொடர்பான ஆசியான் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஆலோசனை மன்றக் கூட்டம், சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, மாநில போலீஸ், பாதுகாப்பு கட்டுப்பாட்டை பலப்படுத்தும்.

குவந்தான், பெக்கான் மாவட்டங்களில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் அந்நிகழ்ச்சிகள் சீராக நடைபெற, பாதுகாப்பு அம்சங்கள் தொடங்கி, முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பகாங் மாநில போலீஸ் தலைவர், டத்தோஸ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.கூட்டங்கள், வருகைகளை மேற்கொள்ளும்போது, எந்த தடைகளும் இன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை போலீசார் உறுதி செய்வர்," என்றார் அவர்.

நேற்று, பகாங் மாநில போலீஸ்  தலைமையகத்தில் நடைபெற்ற சிறந்த சேவைக்கான விருது மற்றும் பதவியளிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய யாஹ்யா ஒத்மான் அவ்வாறு கூறினார்.இம்மாதம் 10, 11ஆம் தேதிகளில், அபாயகர போதைப் பொருள் தொடர்பான கூட்டங்கள் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

Pahang akan memperkukuh kawalan keselamatan sempena Mesyuarat Perundingan Parlimen ASEAN mengenai Dadah Berbahaya 2025 minggu depan. Ketua Polis Pahang, Datuk Seri Yahaya Othman, menjamin acara di Kuantan dan Pekan berjalan lancar tanpa gangguan keselamatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *