ஹம்ஸாவை நீக்க மகாதீர் - முகைதீன் சந்திப்பா? - மகாதீர் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 31: பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் கட்சியின் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனை நீக்க தனது ஆலோசனையை கோரியதாகக் கூறப்படும் கூற்றுகளை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நிராகரித்தார்.

செப்டம்பரில், ஒரு விஷக் கடிதம் பரவியதைத் தொடர்ந்து, பெர்சாத்து உறுப்பினர்களுக்கு முகைதீன் மீதான தனது விசுவாசத்தை ஹம்சா உறுதிப்படுத்த முயன்றார்.

இந்நிலையில், ஈப்போ திமோர் முன்னாள் தலைவர் ஃபத்லி இஸ்மாயில் கடந்த மாதம் ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற முகைதீன் மகாதீரை அவரது வீட்டில் சந்தித்ததாகக் கூறினார். அந்தக் கூட்டத்தில் பெர்சாத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலி மற்றும் துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு ஆகியோரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்படிப்பட்ட சந்திப்பு எதுவும் நடக்கவில்லை என்று FMT ஊடகத்திடம் மகாதீர் கூறினார்.

 ஹம்சாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஆலோசனை கேட்டு முகைதீன் என்னைப் பார்க்க வரவில்லை. இல்லவே இல்லை என்று மகாதிர் கூறினார்.

இந்த விவகாரத்தில் முகைதீன் அல்லது ஹம்சாவுக்கு விசுவாசமான குழுக்களை வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை என்றும், அவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலாய் ஒற்றுமையை அடைய வேண்டுமென்றால், ஹம்சா அல்லது முகைதீன் இருவரையும் பின்பற்றுபவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர்களை நாங்கள் மலாய்க்காரர்களாக மட்டுமே கருதுகிறோம்... ஹம்சாவைப் பின்பற்றுபவர்களாகவோ அல்லது முகைதீனைப் பின்பற்றுபவர்களாகவோ அல்ல என்று மகாதிர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *