பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உடல்சோர்வு-மகாதீர் ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதி!
- Muthu Kumar
- 14 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 14-
புத்ராஜெயாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்த துன் மகாதீர் முகமது கடுமையான உடல்சோர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து தேசிய இருதயக் கழக (ஐஜேஎன்) மருத்துவ மையத்தில் நேற்றுக் காலை 10மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக, புன்னகையுடன் சைக்கிளோட்டப் பயிற்சியில் அவர் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, களைப்பு மிகுதியினால், பிறந்த நாள் கேக்கை வெட்டுவதற்கு முன்பே தமது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியுடன் அவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அதன் பின், காலை 10மணியளவில் ஐஜேஎன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மாதம் பத்தாம் தேதியன்று நூறு வயதை அடைந்த மகாதீர் ஓய்வெடுப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது. ஒரு சில மணிநேரத்திற்குப் பிறகு அங்கிருந்து அவர் வெளியேறலாம் என்று அவரின் உதவியாளர் சுஃபி யூசோப் குறிப்பிட்டார்.
டாக்டர் மகாதீரின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷன் ஏற்பாட்டில் அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் பொதுமக்களும் திரளாகக் கொண்டிருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



