மகாதீர் குணமாகிறார்.. ஆனாலும் இன்னும் கொஞ்ச காலம் மருத்துவமனைதான்!
- Shan Siva
- 20 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 20: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது தேசிய இருதய கழகமான IJN-இல் கடந்த 14 நாட்களாகச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது குணமாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவரது மீட்பு
செயல்முறையின் ஒரு பகுதியாக பிசியோதெரபிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால், அவர் வீடு திரும்புவதற்கு இன்னும் கொஞ்சம் காலம்
எடுக்கும் என்று மகாதீரின் செய்தித் தொடர்பாளர் சுஃபி யூசாஃப் கூறினார்.
டாக்டர் மகாதிர் IJN
இல் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் இன்னும் அறுவை சிகிச்சை இல்லாமல் பிசியோதெரபி சிகிச்சையை
மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.
மருத்துவ நிபுணர்களின்
ஆலோசனையின் பேரில், தற்போது உடனடி குடும்ப
உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாதீர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்த அனைத்து தரப்பினருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



