மகாதீருக்கு இடுப்பு எலும்பு முறிவு! தொடர் கண்காணிப்பில் மகாதீர்
- Shan Siva
- 07 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 7: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தமது இல்லத்தில் தவறி விழுந்ததில் வலது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேசிய இருதய கழகமான (IJN) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது செய்தித் தொடர்பாளர் சுஃபி யூசோப் வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 7.30 மணியளவில் துன் மகாதீர் வீட்டில் விழுந்ததாகவும், பின்னர் காலை 9.30 மணிக்கு IJN-க்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது அவர் சுய நினைவில் இருந்ததாகவும் யூசோ ஃப் கூறினார்.
மருத்துவப் பரிசோதனைகளில் வலது இடுப்பு எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நினைவு நிலையில் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
100 வயதான துன் மகாதீர், சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்காக அடுத்த சில வாரங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து தேவையான நேரங்களில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



