கவுன்சிலர் பதவிகளில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் டி.ஏ.பியில் முன்னுரிமை! சிலாங்கூர் டி.ஏ.பி சாதனை!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 18,

சிலாங்கூர் மாநில டி.ஏ.பி கட்சியில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும் இது சிலாங்கூர் மாநில டி.ஏ.பியின் அடிப்படைக்  கொள்கைகளில் முதன்மையானது என இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில டி.ஏ.பி பேராளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக AHLI MAJLIS எனப்படும் மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில் 31% பெண்களும் 24% இளைஞர்களையும் சிலாங்கூர் மாநில டி.ஏ.பி நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே டி.ஏ.பி மட்டுமே AHLI MAJLIS எனப்படும் மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. AHLI MAJLIS எனப்படும் மாவட்டக் கவுன்சிலர் பதவி என்பது குடியிருப்புவாசிகளின் அன்றாடத் தேவைகளையும் சிக்கல்களையும் உடனடியாகத் தீர்க்கும் ஒரு முக்கிய பொறுப்பு. பாலினச் சமத்துவத்தையும் அடுத்த தலைமுறை மக்கள் தலைவர்களையும் உருவாக்குவதுடன் அவர்களை அங்கீகரிக்கும் ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான AHLI MAJLIS எனப்படும் மாவட்டக் கவுன்சிலர்களை நியமிப்பது அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *