விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்!

top-news

மே 12,

இன்று காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லங்காவி நாடாளுமன்ற உறிப்பினர் Datuk Mohd Suhaimi Abdullah காயமின்றி தப்பினார். கெடாவில் உள்ள சுங்கை தெடாப்பிலிருந்து யான் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் வாகனம் கால்வாயில் கவிழ்ந்ததும் Datuk Mohd Suhaimi Abdullah பொதுமக்களால் மீட்கப்படதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Datuk Mohd Suhaimi Abdullah பயணித்த NISSAN ALMERA வாகனம் பெரும் சேதமடைந்த நிலையில் Datuk Mohd Suhaimi Abdullah உடன் இருந்த அவரது மனைவியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் இருவரும் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதால் யான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Ahli Parlimen Langkawi, Datuk Mohd Suhaimi Abdullah cedera ringan selepas keretanya terbabas mengelak motosikal yang membuat pusingan U di Jalan Sungai Dedap-Yan. Insiden berlaku ketika beliau menuju ke Sungai Limau. Isterinya selamat, manakala kereta rosak teruk. Beliau dirawat di Hospital Yan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Boyarka-Inform.com

Thanks inn support of sharing such a nice thinking, paragraph is fastidious, thats why i have read it fully http://boyarka-inform.com/