கடனைச் செலுத்தாதவர்களின் வீட்டை எரிக்கும் கும்பல் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 29,

கடன் வாங்கியவர்கள் மீண்டும் கடனைச் செலுத்தாமல் தாமதிப்பதால் அவர்களுடைய வீடுகளைத் தீ வைத்து எரிக்கும் ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜொகூர் பாரு Sesyen நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டு நீதிமன்ற மேல்விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையும்ம் முன்வைத்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் தலா RM37,000 ரிங்கிட் வழங்கி நீதிமன்ற விசாரணையை மார்ச் 11 ஒத்திவைத்தார்.

கைது செய்யப்பட்டிருக்கும் 26 வயது 27 வயதுள்ள இருவரும் AH LONG கடன் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை 9 வீடுகளுக்குத் தீ வைத்திருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார். கடந்த நவம்பர் 19 ஆம் திகதி அதிகாலை 1.45 மணிக்கு உலூ திராமில் உள்ள ஒரு வீட்டைத் தீ வைத்து தப்பிய அவர்களைக் காவல்துறை கைது செய்தததாகவும் பெட்ரோல் நிரம்பிய வெடி பொருள்களையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தததாகவும் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார். SKUDAI, ULU TIRAM, KOTA MASAI, PASIR GUDANG ஆகிய பகுதிகளில் 9 வீடுகளைத் தீ வைத்து எரித்திருக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *