பெர்னாமாவின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் எஸ். சிவசெல்வத்தின் மறைவுக்கு ஃபஹ்மி ஃபட்சில் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 13:

இன்று அதிகாலை காலமான மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் எஸ். சிவசெல்வத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறைக்கு அவரது சேவை மற்றும் பங்களிப்புகள் பெரிதும் பாராட்டப்படுகின்றன, மேலும் தொடர்ந்து நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தமது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில்,  உடல்நலக்குறைவால் செராஸில் உள்ள அவரது வீட்டில் சிவசெல்வம் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *