AI அச்சுறுத்தல்! பேராக் மெந்திரி பெசார் புகார்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 3,

பேராக் மெந்திரி பெசார் Datuk Seri Saarani Mohamad உருவத்தைச் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக Datuk Seri Saarani Mohamad தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC-யில் புகார் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டோக் பக்கத்தில் தமது புகைப்படங்களைப் பயன்படுத்தில் வெளியிடப்பட்டிருக்கும் காணொலிகள் தொடர்பாகத் தாம் புகார் அளித்திருப்பதாகவும் அதில் இருக்கும் கருத்துகளுக்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் Datuk Seri Saarani Mohamad விளக்கமளித்தார். குறிப்பிட்ட டிக் டோக் கணக்கில் அரசாங்கத்திற்கும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கும் எதிராகத் தாம் பேசியிருப்பதாக வெளிவந்திருக்கும் காணொலிகள் போலியானவை என்பதை Datuk Seri Saarani Mohamad தெரிவித்தார். 

பேராக் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வச் சமூக வலைத்தலங்களில் மட்டுமே பகிரப்பட்டு வருவதை Datuk Seri Saarani Mohamad சுட்டிக்காட்டினார். சம்மந்தப்பட்ட காணொலிகள் நேற்று மாலை முதல் சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருவதால் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்த நிலையில் டிஜிட்டல் மோசடி தொடர்ந்து பரவுவதைத் தடுக்க, போலி கணக்குகளைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளிக்கவும், சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளத்தில் புகார் அளிக்கவும் பொதுமக்களை பேராக் மெந்திரி பெசார் Datuk Seri Saarani Mohamad கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *