அனிருத்தை "சாய்க்க" வந்த சாய் அபயங்கர்!

top-news
FREE WEBSITE AD

பிரபல பாடகர் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் சாய் அபயங்கர் என்ற 20 வயது இளைஞர்தான், அனிருத்துக்கு போட்டியாக கருதப்பட்டு வருகிறார்..தற்போது கோலிவுட் முழுக்க இதே பேச்சாக உள்ளது.. அனிருத்தைவிட அதிக வாய்ப்புகளை தற்போது சாய் பெற்றுள்ளாராம்.

இசையமைப்பாளர் அனிருத் தற்போது 'கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2' உள்ளிட்ட படங்களுக்கும், தெலுங்கில் 'கிங்டம், மாஜிக், த பாரடைஸ்' ஆகிய படங்களுக்கும், ஹிந்தியில் 'கிங்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இவரது படங்களுக்கான இசை உரிமையை இசை நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால் பணமழை கொட்டி வருகிறது.. எனவேதான், ஏற்கனவே 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வரும்நிலையில், புதிதாக ஒப்பந்தமாக உள்ள படங்களுக்கு அனிருத் சம்பளத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத சாய் அபயங்கர் 10 படங்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத்தின் சில ஆஸ்தான இயக்குனர்களே, சாய் பக்கம் தாவ உள்ள உள்ள நிலையில், அனிருத் எதை பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியதாக கூறுகிறார்கள்.

அதிக சம்பளத்தை அனிருத் கேட்பதாலும், ஏற்கனவே அனிருத் மீதான வெறுப்பு காரணத்தினாலும் தான், பலரும் சாயை நாடி சென்று கொண்டிருக்கிறார்களாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *