மேக விதைப்பு நடவடிக்கையால் இரு மாநிலங்களில் மழைப்பொழிவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 8: நேற்று மேற்கொள்ளப்பட்ட மேக விதைப்பு நடவடிக்கைகள் (OPA) வெற்றிகரமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது. கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் MyRAE அமைப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, இரண்டு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருப்பது தெரியவந்துள்ளது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அவர், பெர்லிஸில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 10 மில்லிமீட்டர் (மிமீ) முதல் 45 மிமீ வரையிலும், கெடாவில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 6 மிமீ முதல் 57.4 மிமீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.

முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இது இருக்கிறது என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *