ஜனவரி 11 வரை மழை! - மெட் மலேசியா கணிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 7: மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா ஜனவரி 11 ஆம் தேதி வரை பருவமழை  மாற்றம்  காரணமாக குறிப்பிடத்தக்க வானிலை இருக்கும் என்று கணித்துள்ளது.

இந்தச் சூழ்நிலை கிழக்கு தீபகற்ப மலேசியா மற்றும் மேற்கு சரவாக்கில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், அந்த காலகட்டத்தில் தென் சீனக் கடலில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்றும்
மெட்மலேசியா  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, திரெங்கானு, வடக்கு  கிளந்தான் மற்றும் கிழக்கு பகாங் மாநிலங்களுக்கு ஜனவரி 8 வரை தொடர் மழை எச்சரிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு ஜொகூர் ஜனவரி 7 முதல் 8 வரை மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேற்கு சரவாக்கில், ஜனவரி 9 முதல் 10 வரை அமலில் இருக்கும். தென் சீனக் கடலுக்கு ஜனவரி 8 வரை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *