நடுவானில் விமானப் பயணிகளிடையே கலவரம்! – AIR ASIA!
- Thinagaren Sanggaren
- 23 Jul, 2025
ஜூலை 23,
விமானப் பயணத்தின் போது பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவரைச் சரமாரியாகத் தாக்கிக்கொள்ளும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது. கடந்த திங்கள் கோலாலம்பூரலிருந்து சீனாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த AIR ASIA விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. 4 மணி நேரப் பயணத்தின் போது பின் இருக்கையில் இருந்த ஆடவர் ஒருவர் முன்னால் அமர்ந்திருந்த 3 பெண்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தியதாகவும் கோபமடைந்த 3 இளம்பெண்களும் பின்னிருந்த ஆடவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
விமானப்
பணிப்பெண்கள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் சுமார் 20 நிமிடங்கள் இந்த
சச்சரவு நீண்டதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது விமானம் நடுவானில் சுமார்
7,000 அடி உயரத்தில்
பறந்ததுக் கொண்டிருந்ததாகவும் 3 இளம் பெண்கள் சம்மந்தப்பட்ட ஆடவரின் முகத்திலேயே சரமாரியாகத்
தாக்கியதாகவும் சீனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது விமான நிலைய அதிகாரிகளிடம்
3 இளம்பெண்களையும் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



