ஆசியான் விமானங்கள் மற்ற ஆசியான் நாடுகளில் விமானங்களை நிறுத்தலாம்
- Shan Siva
- 22 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 22: ஆசியான் நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு முதல் மற்ற ஆசியான் நாடுகளில் தங்கள் விமானங்களை நிறுத்துவதற்கு ஏதுவான உரிமையுடன் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியா பிராந்தியம் முழுவதும் தடையற்ற பயணத்தை செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சியானது, எந்த ஆசியான் உறுப்பு நாடுகளிலும் விமானங்கள்
நிறுத்தப்படுவதற்கு அனுமதிக்கும் ஸ்டாப்ஓவர் உரிமைகள் குறித்த நெறிமுறையில்
கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி
லோக் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற 30வது ஆசியான் போக்குவரத்து அமைச்சர்கள்
கூட்டத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போதைய ஆசியான்
கொள்கையானது, பிராந்தியத்திற்குள் ஒரு இலக்கை அடைந்த பிறகு, விமானங்கள் அவற்றின் சொந்த இடத்திற்குத்
திரும்ப வேண்டும் என்று குறிப்பிடுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இந்த நெறிமுறையின் மூலம், விமான நிறுவனங்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டவுடன்
ஆசியானுக்குள் மற்றொரு இடத்திற்குச் செல்லலாம்," என்று அவர் கூறினார்.
உதாரணமாக,
கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும்
விமானம் பாலிக்கு தொடர முடியும் என்று விளக்கினார்.
இருப்பினும்,
மியன்மார் மற்றும் இந்தோனேசியா இன்னும்
நெறிமுறையில் கையெழுத்திடாததால், கொள்கையை எப்போது
முழுமையாக செயல்படுத்த முடியும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *