ஐதானா மூன்றாவது முறையாக மகளிர் பலோன் டி’ஓர் விருதை வென்றார்

top-news

பாரிஸ், செப். 25-

செய்தி-வெற்றி மைந்தன்

பார்சிலோனா, ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீராங்கனை ஐதானா, உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக தனது அந்தஸ்தை மீண்டும் நிரூபித்து, பாரிஸில் நடைபெற்ற மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவில், மூன்றாவது முறையாக மகளிர் பலோன் டிஓர் விருதை வென்றார்.

27 வயதான இந்த மத்திய கள வீராங்கனை, தனது தேசிய அணி தோழி மரியோனா கால்டென்டியை பின்னுக்குத் தள்ளினார். மரியோனா, கடந்த சீசனில் ர்சனல் அணிக்காக பார்சிலோனாவை மகளிர் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் வீழ்த்த உதவியிருந்தார்.

எனினும், ஐதானா ஒரு ஏமாற்றத்தையும் சந்தித்தார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மகளிர் யூரோ 2025 இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியிடம் பெனால்டி முறையில் தோல்வியடைந்தது. இருப்பினும், முழு சீசனிலும் அவரது சீரான, அபாரமான ஆட்டம், அவரை உலக கால்பந்தின் உச்சியில் நிலைநிறுத்தியது.

மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில், ஐதானா வைரஸ் மூளைக்காய்ச்சல் (மெனிஞ்சிடிஸ்) நோயிலிருந்து மீண்டு வந்த பிறகு, யூரோ 2025 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்றபோதிலும், அந்தத் தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது திறமை, மனவலிமையை பறைசாற்றுகிறது.

பார்சிலோனாவுக்காகவும், ஸ்பெயின் அணிக்காகவும் தொடர்ந்து பிரகாசிக்கும் ஐதானா, இந்த விருது மூலம் மகளிர் கால்பந்து உலகில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *