இராஜேந்திர சோழனின் கடல் வெற்றி! போர்ட் கிள்ளானில் முனைவர் தெய்வநாயகம் சிறப்புரை

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், மார்ச் 5: இராஜேந்திர சோழனின்   கடல் வெற்றியைப் பற்றி வரலாற்றுக் கருத்தரங்கம் போர்ட் கிள்ளானில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருக்குறள் மன்றம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து யுனஸ்கோ ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான முனைவர் தெய்வநாயகம் இராஜேந்திர சோழனின் கடல் வெற்றியும் அதன் விளைவும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இராஜேந்திர சோழனின் அரிய பல தகவல்களை ஆதாரத்தோடு அவர் விவரித்தார். மலேசிய பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வுகள் முதற்கொண்ட், யுனெஸ்கோ அங்கீகாரம் வரை பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

அரங்கம் நிறைந்த வருகையாளர்களுக்கு மத்தியில், வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இரவு 8 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு 10.30 மணியைக் கடந்த போதிலும்  பொதுமக்கள் ஆர்வமாய் கேட்டு ரசித்தனர். இனிய தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *