நஜிப் சிறைக்குச் சென்று இன்றோடு 3 ஆண்டுகள்!
- Shan Siva
- 23 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 23: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காஜாங் சிறையில் தனது சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி இன்றோடு சரியாக மூன்று ஆண்டுகள் - அல்லது 1,096 நாட்கள் - நிறைவடைகிறது.
72 வயதாகும் ஆறாவது
பிரதமர், SRC இன்டர்நேஷனல் SDN
Bhd (SRC) நிறுவனத்திற்குச்
சொந்தமான RM42 மில்லியனை
முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டார்.
இந்த தண்டனை
டிசம்பர் 2021 இல்
மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது, பின்னர் ஆகஸ்ட் 23, 2022 அன்று புத்ராஜெயாவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தால் உறுதி
செய்யப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



