நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்.... பகாங் சுல்தானுக்கு அன்வார் பாராட்டு!

top-news
FREE WEBSITE AD

ஷா  அலாம், மார்ச் 1: பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நஜிப் ரசாக்குடன் தொடர்புடைய அரச கூடுதல் உத்தர்வு குறித்து பொதுமக்கள் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பது, பாஸ் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் தோல்வியடைவார்கள் என்று பிகேஆர் தலைவருமான அன்வார், நேற்றிரவு சிலாங்கூர் பிகேஆர் ஆண்டு பொதுக் கூட்டத்தின் தொடக்கத்தில் கூறினார்.

 இந்த விஷயத்தில் பாஸ் கட்சி இனிமேல் பேசுவதற்கு எதுவும் இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

ஜனவரியில், பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான், நஜிப் வீட்டுக்காவல் அரச உத்தரவு தொடர்பான சர்ச்சையை அன்வார் நிர்வகித்ததை மேற்கோள் காட்டி, அரசாங்கத்தை வழிநடத்தும் அவரது திறன் குறித்து சந்தேகம் எழுப்பினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் பிரதமரின் துணை ஆணையின் மனுவை விசாரித்த அதே நாளில், ஒரு பேரணியையும் பாஸ் கட்சி நடத்தியது.

இதனிடையே இது குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என்று முன்னாள் பேரரசரான பகாங் சுல்தான் உத்தரவிட்டைதை அடுத்து, சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்ததற்காக பகாங் சுல்தானை அன்வார் பாராட்டினார்!

Perdana Menteri Anwar Ibrahim menegaskan PAS tidak boleh lagi mempolitikkan isu perintah tambahan diraja berkaitan Najib Razak. Beliau menyokong gesaan Sultan Pahang agar rakyat tidak membahaskan perkara itu dan membiarkan proses undang-undang berjalan seperti biasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *