நஜிப் வீட்டுக்காவல் உத்தரவு! - 7 கடிதங்களுக்குப் பதில் இல்லை! - நஜிப் வழக்கறிஞர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 29: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான வீட்டுக்காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு இருப்பதை உறுதிப்படுத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குறைந்தது ஏழு கடிதங்களை அனுப்பியதாக நஜிப்பின் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா இன்று தெரிவித்துள்ளார்.

தமது கடிதங்களுக்கு எந்த தரப்பினரும் பதிலளிக்கவில்லை அல்லது அவற்றைப் பெற்றதை ஒப்புக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

சட்டத்துறை முன்னாள் தலைவர் அஹ்மத் டெர்ரிருதீன் சாலே, உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்,  சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அசலினா ஒஸ்மான் சையத், சிறைச்சாலை ஆணையர் மற்றும் அரசாங்கத்திற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

ஒருவேளை அரச கூடுதல் உத்தரவு தொடர்பாக அத்தகைய பிற்சேர்க்கை எதுவும் இல்லையென்றால், அதற்கான அவரது கடிதங்களுக்கு பதிலளிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

வீட்டுக் காவலில் தனது சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை அனுபவிக்கும் வகையில் அரச ஆணையை அமல்படுத்த நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றார்.

இருப்பினும், தற்போதைய சட்டத்துறை தலைமை அலுவலகம் கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டை முடிக்கும் வரை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நீதித்துறை மறுஆய்வு தாக்கல் செய்யப்படும்போது, ​​சம்மன் அனுப்பப்பட்ட தரப்பினர் தங்கள் விளக்கம் மற்றும் அவர்கள் கையில் வைத்திருக்கும் எந்த ஆவணம் குறித்தும் நேர்மையாக இருப்பது கட்டாயமாகும் என்று ஷஃபி கூறினார்!

Peguam Najib Razak, Shafee Abdullah, mengesahkan telah menghantar sekurang-kurangnya tujuh surat kepada pelbagai pihak mengenai perintah tahanan rumah tambahan, namun tiada maklum balas diterima. Prosiding semakan kehakiman ditangguh sementara menunggu keputusan rayuan Jabatan Peguam Negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *