AKAN DATANG? அன்வாரின் புதிய அறிவிப்பு!
- Thinagaren Sanggaren
- 15 Jul, 2025
ஜூலை 15,
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நேற்று முதல் பிரதமர் அன்வார் உட்பட அனைத்து அமைச்சர்களும் AKAN DATANG எனும் சுலோகங்களுடன் சமூகவலைத்தலங்களில் பதாகைகளைப் பகிர்ந்துள்ளது. முக்கியமாக பி.கே.ஆர் , டி.ஏ.பி , அமானா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்களின் சமூகவலைத்தலங்களில் இந்த பதாகைகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த அறிவிப்பானது அனைத்து பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமூகவலைத்தலங்களில் அமைச்சின் அதிகாரப்பூர்வச் சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டுள்ளது மக்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி உள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக ஒற்றுமை கூட்டணியின் பிரதான கூட்டணிக் கட்சிகளான BARISAN NASIONAL & PAKATAN HARAPAN நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனது வீட்டில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim ரகசிய சந்திப்பை நடத்தியதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்த முக்கிய அறிவிப்பிற்கானப் பதாகைகள் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அமைச்சர் துணை அமைச்சர்களிடமிருந்து வெளியாகி இருக்கிறது. கடந்த 2 நாள்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான பிரதமர் அன்வாரின் சந்திப்பில் PANDAN நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான DATUK SERI RAFIZI RAMLI, SETIAWANGSA நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான Nik Nazmi Nik Ahmad ஆகிய இருவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



