நாளை 10.30-க்கு அன்வாரின் புதிய அறிவிப்பு! காத்திருங்கள்!
- Thinagaren Sanggaren
- 22 Jul, 2025
ஜூலை 22,
மலேசிய மக்களுக்கான அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து நாளை காலை 10.30 மணிக்குப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அறிவிப்பு செய்வார் என தகவல் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil இன்று வலியுறுத்தினார். நாளை ஜூலை 23 மக்களுக்குப் பயனான ஒரு திட்டத்தைப் பிரதமர் அன்வார் அறிவிப்பார் என்றும் அந்த அறிவிப்பின் மூலமாக அனைத்து மலேசியர்களும் பயனடைவார்கள் எனும் நம்பிக்கையைத் தாம் கொண்டிருப்பதாக Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
முன்னதாக அனைத்து அமைச்சர்களும் ஒற்றுமை
கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான புதிய அறிவிப்புகள் குறித்து சமூக
வலைத்தலங்களில் பிரச்சாரம் செய்ததை அடுத்து மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அதனை அடுத்து மறுநாள் பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாரிசான்
நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தனது பிரதமர் அலுவலகத்தில் தனித்தனியாகச் சந்திப்பையும் நடத்தியது மலேசிய
அரசியல் சூழலில் முக்கிய பேசு பொருளானது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



