சுல்தான்களுக்கு எதிராக 15,296 போலி சமூகவலைத்தலக் கணக்குகள்! MCMC நடவடிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 09 May, 2026
மே 9,
மலாய் ஆட்சியாளர்களான சுல்தான்களின் அரசக் குடும்பத்தைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் சமூகவலைத்தலங்களில் இயங்கி வந்த 15,296 போலி கணக்குகளில் 14,750 கணக்குகள் நீக்கப்பட்டிருப்பதாகத் தொடர்புத் துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC சம்மந்தப்பட்ட போலி சமூகவலைத்தலக் கணக்குகளைச் சோதனையிட்டதாகவும் போலியான கணக்குகள் என உறுதிப்படுத்தப்பட்டவையை உடனடியாக நீக்கப்பட்டிருப்பதாகவும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
3R சட்ட நடவடிக்கையின் கீழ் சம்மந்தப்பட்ட போலி கணக்குகளைப் பயன்படுத்தியவர்களைத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC அடையாளம் கண்டிருப்பதாகவும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தொடர்புத் துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். இந்நடவடிக்கை குறித்து சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதாகவும் மலாய் ஆட்சியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பானப் பதிவுகளையும் தரவுகளையும் பாதுகாப்பதில் அரசு முன்னுரிமை வழங்குவதாக தொடர்புத் துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



