போலி முகப்பிட விவகாரம்- கைதானவர்கள், நண்பர்கள் மீது எம்ஏசிசி தீவிர விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 19-

முகப்பிடங்கள்' “போலி ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் நிதி விவரங்களை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

அக்கும்பலின் நிதிப் புழக்கத்தைக் கண்டறிவதற்காக, கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கும் அனைவரும் இதில் அடங்கி இருப்பதாக, எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இதுவரையில் புதிதாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறிய அவர், எனினும், இதற்கு அடுத்து சிலர் கைது செய்யப்படக் கூடிய சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.

லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்த்து, 2001ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதி உதவியளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் பெற்றல் தடைச் சட்டத்தின் கீழும் எம்ஏசிசி விசாரணை அறிக்கையைத் திறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். "பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சொத்து மற்றும் ரொக்கப் பணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், தங்களின் சொத்துகளை அறிவிக்குமாறும் அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும்."தொடர்பு ஏதேனும் இருந்தால், கைதாகி இருப்போரின் நண்பர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்" என்று சிலாங்கூர், சிப்பாங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அஸாம் தெரிவித்தார்.

சொகுசு கார்கள் வாங்கவும் வர்த்தகத்தைத் தொடங்கவும் மற்றும் பணத்தை சேமிப்பில் வைக்கவும் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒப்ஸ் ரெந்தாஸ் நடவடிக்கைகளின் கீழ் சிலாங்கூர், மலாக்கா, கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய நான்கு மாநிலங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது குடிநுழைவு இலாகாவைச் சேர்ந்த 18 அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, தகவல் சாதனங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நடவடிக்கைகளின்போது 16 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 3.2 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 4 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 75 தங்கக் கட்டிகள் உட்பட பல்வேறு விலையுயர்ந்த பொருட்களும் அறுவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அந்த அறுவரில் ஐவர் நாட்டின் பிரதான நுழைவாயில்களில் பணி புரிந்த குடிநுழைவு இலாகா அதிகாரிகளாவர்.

இந்த அதிகாரிகளில் ஒருவர், லஞ்சமாகப் பெற்ற பணத்தில் 10 லட்சம் வெள்ளியை தாபோங் ஹாஜியிலும் 4 லட்சம் வெள்ளியை அமானா சஹாம் பூமிபுத்ராவிலும் முதலீடு செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட லஞ்சப் பணத்தில் 6 லட்சம் வெள்ளி முதலீட்டில் பகாங்கின் குவாந்தானில் ஒரு நகைக் கடையை திறக்கும் அளவுக்கு தங்க ஆபரணங்களை வாங்கியதன் மூலம், செல்வத்தை சேகரித்ததற்காக குடிநுழைவு இலாகாவில் பணி புரியும் கணவன்-மனைவி இருவரையும் எம்ஏசிசி கைது செய்திருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *