போலி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள்: சிலாங்கூர் கெராக்கான் ஆண்டு பொதுக் கூட்டத்தில் சர்ச்சை!
- Muthu Kumar
- 23 Sep, 2025
பெட்டாலிங்ஜெயா, செப். 23-
போலி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் சிலாங்கூர் கெராக்கான் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.சிலாங்கூர் மாநில கெராக்கான் கட்சியின் வருடாந்திர பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது மாநிலத் தலைவர் ஹென்றி தியோ, கட்சிக்குள் போலி உறுப்பினர்கள் ஊடுருவியதாகக் கூறியதால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.மத்தியக் குழுவில் ஒருவர் தனக்குத் தெரியாமல் சிலாங்கூர் உறுப்பினர்களை வழி நடத்தியதாக தியோ குற்றம் சாட்டினார்.மேலும் இந்த விஷயத்தை விசாரித்து தீர்க்குமாறு தலைவர் டொமினிக் லாவை வலியுறுத்தினார்.
பின்னர் லாவ் உடனடியாக ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்தினார்.அங்கிருந்த பத்திரிகையாளர்களை மண்டபத்தை விட்டு வெளியேறச் சொன்னார்.பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உறுப்பினர் சேர்ப்பு செயல்முறை தொடர்பாக தவறான புரிதல் இருந்ததாக லாவ் கூறினார். கெராக்கான் சிலாங்கூர் உறுப்பினர்களை கையாள எந்த முயற்சியும் இல்லை என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



