போலி “டச் அண்ட் கோ” கார்டுகள்-நெகிரியில் கணவன்,மனைவி கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 13-

நெகிரி செம்பிலானில் தங்களின் போக்குவரத்து நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு போலியான "டச் அண்ட் கோ" கார்டுகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒரு தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.அந்த சட்டவிரோத நடவடிக்கை மூலம் கடந்தாண்டிலிருந்து இதுவரை அறுபதாயிரம் வெள்ளி இழப்பை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் விநியோகிப்பாளர் ஒருவரிடமிருந்து பெரும் எண்ணிக்கையில் அந்த போலி சாலைக் கட்டண அட்டைகளை அவர்கள் வாங்கியுள்ளனர். ஒவ்வொரு அட்டையையும்
150 வெள்ளிக்கு அவர்கள் விற்றுள்ளனர். அந்த அட்டையில் சட்டப்பூர்வமான முறையில் 300 வெள்ளியை அவர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அம்மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஃபானி அமாட் குறிப்பிட்டார்.

அச்சம்பவம் தொடர்பில் 43 வயதான மலேசியரும் 33 வயதான அவரின் மனைவியும் கைதுசெய்யப் பட்டனர். அப்பெண் சீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.சாலைக் கட்டண சாவடிகள் வாயிலாக செல்லும் சரக்கு லோரிகளின் ஓட்டுநர்களிடம் அந்த அட்டைகளை அவர்கள் விற்றுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *