சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிய பாகிஸ்தான் கைதி! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை
- Shan Siva
- 10 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 10: நேற்று சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த விசாரணைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
24 வயதான முஹம்மது ஹசன் மீது கொள்ளை, சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் மற்றும் குடிநுழைவு தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று சுங்கை பூலோ காவல் நிலையத் தலைவர் ஹாஃபிஸ் முஹம்மது நூர் கூதெரிவித்தார்.
சந்தேக நபர் கடைசியாக ஆரஞ்சு நிற டி-ஷர்ட் மற்றும் நீண்ட கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்ததாகக் காணப்பட்டார்.
சந்தேக நபரின் நடமாட்டத்தை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஹாஃபிஸ் கூறினார்.
சந்தேக நபருக்கு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வரலாறு இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



