திடீரென எல்லைகளை மூடிய பாகிஸ்தான்!

top-news
FREE WEBSITE AD

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உடனான எல்லை கதவுகளை ஞாயிற்றுக்கிழமை மூடியுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இரு நாட்டுகளின் ராணுவ படைகளிடையே ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.ஆப்கானிஸ்தான் படைகள் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லை காவல் தளங்களை தாக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானிஸ் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் துப்பாக்கி மற்றும் பிரங்கி வாயிலாகவே தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த மோதல், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் இரு முக்கிய எல்லைகளான தொர்கம் மற்றும் சமன் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளது. தொர்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்துடன் இணைக்கிறது, சமன் பலூசிஸ்தான் மாகாணத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருடன் இணைக்கிறது.

இவ்விரு எல்லைகளை மூடப்பட்டதால் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக போக்குவரத்து முழுமையாக பாதித்துள்ளது. இதேபோல் பயணிகள் போக்குவரத்து, மக்களின் இயக்கத்தை மொத்தமாக நிறுத்தியுள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக இது பாகிஸ்தான்-க்கு பெரும் பாதிப்பாக இருக்கும், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானின் முக்கிய வர்த்தக நாடாகும்.

தொர்கம் மற்றும் சமன் உடன் இரு நாடுகள் மத்தியிலான மூன்று சிறிய எல்லை கடக்கும் பகுதிகளாக இருக்கும் கார்லாச்சி, அங்கூர் அடா மற்றும் குலாம் கான் ஆகிய எல்லை பகுதிகளும் மூடப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த தாக்குதல் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவுகளின் பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021-இல் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சியை பிடித்த பிறகு இரு நாடுகளும் தொடர்ந்து பதற்றத்தை சந்தித்து வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *