அக்மால் டி.ஏ.பியை எதிர்ப்பது போல நடிக்கிறார்! – சனூசி சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 26,

டி.ஏ.பியை அம்னோ போலியாக எதிர்த்து வருவதாகவும் அக்மால் டி.ஏ.பியை எதிர்ப்பது போல நடித்துக்கொண்டிருக்கிறார் என பாஸ் கட்சியின் சனூசி நோர் தெரிவித்தார். அக்மால் தொடர்ச்சியாக டி.ஏ.பி தலைவர்களுடன் மல்லுக்கட்டுகிறார் என்பதால் அவர் வலிமையானவராகக் கருத முடியாது. அக்மால் மூர்க்கத்தனமாக தோன்றினாலும் உண்மையில் அவர்  ZAHID HAMIDIயின் கைப்பாவை. 

அக்மாலைப் போல தான் அம்னோவில் கைரி ஜமாலுடின் ZAHID HAMIDIக்கு நெருக்கமாக இருந்தார். ZAHID HAMIDIயை எதிர்த்து அம்னோ தலைவருக்குப் போட்டியிட்டதால் கைரி ஜமாலுடின் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார். கைரி அம்னோவிலிருந்து நீக்கப்பட்டது கெடாவுக்கு வர விரும்புவதாகத் தெரிவித்தார். நானும் வாருங்கள், கெடா பெரிக்காத்தான் அரவணைக்கும் என தெரிவித்தேன். ஆனால் இறுதியில் கைரி UTURN அடித்துவிட்டார் என சனூசி தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தில் இருக்கும் ZAHID HAMIDIயால் டி.ஏ.பியை எதிர்க்க முடியாது. இதனால் தான் அக்மால் சலே மூலமாக டி.ஏ.பியைச் சீண்டிக் கொண்டு இருக்கிறார் ZAHID HAMIDI. டி.ஏ.பியைச் சீண்டினால் டி.ஏ.பியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவருக்குச் சாதகமாக அரசியல் நடத்துகிறார் என சனூசி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *