முடிந்தால் பாரிசானை அரசாங்கத்திலிருந்து நீக்கி பாருங்கள்! - Akmal Saleh சவால்!

top-news

ஜூன் 4,

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து பாரிசானை நீக்கும் எண்ணம் யாருக்காவது இருந்தால் வெளிப்படையாகத் தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh சவால் விடுத்தார். அரசாங்கத் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் குடிமக்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேட்கலாம். அப்படி தான், ம.சீ.ச ஒற்றுமை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. ஆனால் ம.சீ.ச ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென நினைக்கும் டி.ஏ.பி முடிந்தால், பாரிசானை ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து நீக்கி பாருங்கள் என Datuk Dr Muhamad Akmal Saleh சவால் விடுத்தார்.

முன்னதாக BANGI நாடாளுமன்ற உறுப்பினரும் டி.ஏ.பி உதவித் தலைவருமான Syahredzan Johan, ம.சீ.ச ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் குற்றம் சாட்டியதுடன் ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்க தேவை இல்லை என தெரிவித்திருந்தார். BANGI நாடாளுமன்ற உறுப்பினரும் டி.ஏ.பி உதவித் தலைவருமான Syahredzan Johan கருத்தை மேற்கோள்காட்டிய அக்மால் சலே, துணிவிருந்தால் பாரிசானை ஒற்றுமை கூட்டணியிலிருந்து நீக்க Syahredzan முயற்சிக்கட்டும் என Datuk Dr Muhamad Akmal Saleh சவால் விடுத்தார்.

Ketua Pemuda UMNO, Datuk Dr Muhamad Akmal Saleh mencabar DAP agar membawa usul jelas untuk menyingkirkan Barisan Nasional daripada kerajaan perpaduan sekiranya benar-benar berani. Cabaran ini susulan kritikan DAP terhadap MCA yang menganggotai kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *