ஆட்சிக்குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தபின் ராஜினாமா-அக்மல் சாலே
- Tamil Malar (Reporter)
- 19 Jan, 2026
ஆயிர் குரோ, ஜன. 19-
அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மல் சாலே, மலாக்கா மாநில அரசின் நிர்வாகக் குழு உறுப்பினர் (EXCO) பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை இரவு நடைபெறவுள்ள EXCO வாராந்திரக் கூட்டம் முடிந்த உடனேயே அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
மெர்லிமாவ் மாநில சட்டமன்ற உறுப்பினரான (ADUN) டத்தோ டாக்டர் முகமது அக்மல், முதலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட் டிக்சனில் நடைபெறவுள்ள மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்களின் முகாம் (Pemukiman ADUN Melaka) நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறினார். இந்த நிகழ்வு இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
“நாளை இரவு நடைபெறும் EXCO வாராந்திரக் கூட்டத்தில் நான் கடைசியாக பங்கேற்பேன். அதன் பின்னர் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பேன்,” என்று அவர் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய செய்தி மூலம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



