அக்மால் விலகல் ; அம்னோவுக்கு மலாக்கா டி.ஏ.பி நன்றி!
- Thinagaren Sanggaren
- 15 Jan, 2026
ஜனவரி 15,
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மல் சலே தாம் வகித்து வந்த மலாக்க மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதை மலாக்க மாநில டி.ஏ.பி முழுமையாக ஏற்பதாக மாநில டி.ஏ.பி தலைவர் கூ போஆய் தியோங் தெரிவித்துள்ளார். அக்மால் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக ஆற்றிய சேவைக்கு மலாக்கா மாநில டி.ஏ.பியினர் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டி.ஏ.பியுடன் அம்னோ கொண்டிருக்கும் ஆட்சி பங்கீட்டையும் ஆதரவையும் அம்னோ மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அம்னோ பாஸ் கட்சியுடன் இணைய வேண்டும் என்றும் அக்மால் வலியுறுத்தியது மட்டுமின்றி மலாக்கா மாநிலத்தின் அரசாங்கத்திலிருந்தும் டி.ஏ.பி விலக வேண்டும் என அக்மால் வலியுறுத்தியதை அடுத்து மலாக்கா மாநில டி.ஏ.பி கட்சியினர் அக்மாலைக் கடுமையாகச் சாடினர். இதன் தொடர்ச்சியாக இன்று அம்னோவின் தேசிய மாநாட்டில் டி.ஏ.பியுடன் இணைந்து பணியாற்ற தேவை அம்னோவுக்கு இருந்தாலும் தனக்கு அப்படி இல்லை என்பதால், மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அம்னோவில் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சலே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



