ஆண்மை இருந்தால் அரசாங்கத்திலிருந்து DAP விலக வேண்டும்! - அம்னோவின் அக்மால் சலே ஆவேசம்!
- THINAGAREN SANGGAREN
- 25 Feb, 2026
பிப்ரவரி 25,
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து டி.ஏ.பி விலகுவதாக இருந்தால் எப்பவோ விலகியிருக்க வேண்டும் என்றும் இப்போது விலகுவதாகப் பூச்சாண்டிக் காட்டக் கூடாது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் DATUK AKMAL SALEH தெரிவித்துள்ளார். தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI வெளிநாட்டு முதலீடுகளுடன் தொடர்புடையவர் எனும்படியானக் குற்றச்சாட்டு தற்போது விசாரணையில் இருப்பதால் AZAM BAKI SPRM தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என டி.ஏ.பியின் KOTA MELAKA நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு முதலீடுகளில் தொடர்புடைய அசாம் பாக்கியை விலக்குங்கள் இல்லையேல் எங்களை விலக்கிக் கொள்கிறோம் என KOTA MELAKA நாடாளுமன்ற உறுப்பினர் Khoo Poay Tiong அரசாங்கத்தை எச்சரித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டி.ஏ.பியை அரசாங்கத்திலிருந்து விலகும்படி நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் ஆனால் ஆண்மையற்ற கோழைத்தனமான இந்த டி.ஏ.பி அரசாங்கத்தில் ஒட்டுண்ணியாக இருந்து வருகிறது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் DATUK AKMAL SALEH கடுமையாகச் சாடினார்.
DAP அன்வாரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதில் நியாயமே இல்லை என்றும் அரசாங்கத்தின் பதவிகளை அனுபவிக்கும் DAP அரசாங்கத்தை விட்டு விலகும் என பூச்சாண்டிக் காட்டி வருவதாகவும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் DATUK AKMAL SALEH விமர்சித்தார். எனக்கு ஆண்மை இருந்தால் பதவி விலகும்படி டி.ஏ.பி கூறிய போது நான் பதவி விலகினேன். இப்போது நான் கேட்கிறேன். ஆண்மை இருந்தால் பதவியிலிருந்து விலகுங்கள் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் DATUK AKMAL SALEH ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



