19 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை! – AKPS KLIA!
- Thinagaren Sanggaren
- 15 Dec, 2025
டிசம்பர் 15,
தேசிய எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு ஆணையமான AKPS-இன் 19 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக AKPS தலைமை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்கு வருபவர்களை முறையாகக் கண்காணிக்காதது அதிகமாக விடுப்புகள் எடுப்பது, வெளிநாட்டினர்களைச் சோதனையிடுவதில் சுணக்கம் காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்ட 19 அதிகாரிகள் மீது மொத்தம் 43 ஒழுங்கு குற்றங்கள் சுமத்தப்பட்டதால் கடந்த 6 மாதமாக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற AKPS ஒழுங்கு நடவடிக்கை ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்தில் அவர்களைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டதாகத் தேசிய எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு ஆணையமான AKPS வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர்கள் அனைத்துலக விமான நிலையத்தின் மூலமாக மலேசியாவுக்குள் நுழைவது என்பது பொறுப்பான அதிகாரிகளால் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அப்படியான பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளில் மெத்தனமான தன்மையால் நாட்டின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதைத் தேசிய எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு ஆணையமான AKPS உணர்ந்திருப்பதால் குற்றம் சுமத்தப்பட்ட 19 AKPS அரசு அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



