சட்டவிரோதக் குடியேறிகளை அனுமதித்த 26 அதிகாரிகள் பணிநீக்கம்! – SAIFUDDIN!
- Thinagaren Sanggaren
- 04 Aug, 2025
ஆகஸ்ட் 4,
முறையான ஆவணங்களில்லாமல் மலேசியாவுக்குள் வெளிநாட்டினர்களை அனுமதித்த 26 அமலாக்க அதிகாரிகளை உள்துறை அமைச்சு உடனடியாகப் பணிநீக்அம் செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 50 க்கும் மேற்பட்ட புகார்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணம் விசாரித்து வரும் நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்களைப் பணி நீக்கம் செய்திருப்பதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
கோலாலம்பூர்
அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக மலேசியாவுக்குள் வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக
நுழைய வழிவகுத்ததாகக் கருதப்படும் அமலாக்க அதிகாரிகள் மீதான விசாரணையை விரைந்து மேற்கொள்ளும்படி
வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் Datuk
Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். குறிப்பாக லஞ்சம் பெற்றதாக
உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அமலாக்க அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாகப்
பணி நீக்கம் செய்து வருவதாகவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நம்பப்படும் அதிகாரிகள்
மீதான வழக்கை அரசு தரப்பு நீதிமன்ற விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் Datuk
Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



