போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பி.டி.ஆர்.எம். உதவி தேவை: ஏ.கே.பி.எஸ். தலைவர்

top-news

புத்ராஜெயா, டிச. 18-

அனைத்துலக, உள்நாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலால் ஏற்படும் போதைப்பொருள் கடத்தல் பிரச்சினை, அரசாங்கத்தின் பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பிறகும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

இதனால், மலேசிய எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு (ஏ.கே.பி.எஸ்.) போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கி கடத்தல், பிற சட்டவிரோத செயல்பாடுகளை எதிர்த்து போராடவும் அழிக்கவும் அரச மலேசிய காவல் படையின் (பி.டி.ஆர்.எம்.) நிபுணத்துவம், அனுபவம், மனிதவளத்தை ஒன்றிணைத்து செயல்பட வேண்டியுள்ளது.

ஏ.கே.பி.எஸ். இயக்குநர் ஜெனரல் டத்தோ ஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறுகையில், பி.டி.ஆர்.எம். ஏஜென்சியை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்க முடியும், குறிப்பாக நிபுணத்துவம், செயல்பாட்டு அனுபவம் தேவைப்படும் என்றார்.

"ஏ.கே.பி.எஸ். ஆறு முக்கிய அமைப்புகளின் அதிகாரிகள், உறுப்பினர்களின் வலிமை, நிபுணத்துவத்தைக் கொண்டிருந்தாலும், பயிற்சி பெற்ற, அனுபவமிக்க மனிதவளம், குறிப்பாக பி.டி.ஆர்.எம். இலிருந்து இந்த அமைப்புக்கு மிகவும் தேவைப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இந்த ஒத்துழைப்பு எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *