குழந்தைகளை நோக்கி பாயும் சைபர் கிரைம்:எச்சரிக்கை விடுத்தார் துணைப் பிரதமர்

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 18-

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களால் உந்தப்பட்ட சைபர் குற்றங்கள் தற்போது ஆசியான் வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளை, குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு இரையாக்கி வருவதாகத் தெரிவித்தார்.

இணைய பாதுகாப்பு இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. டிஜிட்டல் உலகம் வாய்ப்புகளைத் தருகிறது என்றாலும், அதன் ஆபத்துகள் நம்மால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பரவுகின்றன என்று அவர் கவலை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட 74 சதவீத இணையப் பயனர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. மலேசியாவில் நடத்தப்பட்ட தனி ஆய்வொன்று, இளம் வயதினரில் சுமார் 33 சதவீதம் பேர் சைபர் பகடிவதைக்குப் பலியாகியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல், ஆபாச உள்ளடக்கங்களைப் பரப்புதல், ஆன்லைன் மோசடி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதே முக்கியக் காரணம் என்றும் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் சுட்டிக்காட்டினார்.

இது ஒரு நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல; உலகளாவிய அச்சுறுத்தல். குழந்தைகளைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *