மலர் டிவியின் வாசகர் கலை விழா! ஞானப்பூக்களின் அசத்தல் திருவிழா!
- Shan Siva
- 24 Nov, 2025
கிள்ளான், நவ 24: மலர் டிவியின் வாகசர் கலை விழா நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2025) தலைநகர் சோமா அரங்கில் நடைபெற்றது. ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் மலேசியா அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் முன்னிலை வகிக்க, தொழிலதிபர் ரவீந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மலர் டிவியின் நேயர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் பிரதிநிதியாக மலர் டிவி ஆசிரியர் சண்.சிவா நிகழ்வுக்குத்
தலைமை தாங்கினார்.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக இசையமைப்பாளர் ஜெய் தலைமைமையிலான ‘ஜோ பேண்ட்’ இசைக்குழுவினர் தங்களின் அபாரத் திறமையால்
அவையோர் அனைவரையும் இரவு 11 மணிக்கு மேலும் நகர விடாமல் தங்கள் இசையால் மகிழ்வித்தனர்.
சிறுவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இசைக்குழுவில் உள்ள அத்தனை பேருமே அனைத்துக்
கருவிகளையும் வாசிக்கும் வல்லமை பெற்றிருப்பதோடு, பாடல் திறனிலும் தனி முத்திரை பதித்திருப்பது கூடுதல் சிறப்பு. அனைவருமே தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் என்பது மேலும் சிறப்பு.
பாடல்கள் தேர்வு, பாடிய விதம், உடல் மொழி என காண்போர் வியக்கும்
வண்ணம் இருந்தது அவர்களின் அபாரா ஆற்றல்.
மூத்தக் கலைஞர்கள், பொதுமக்கள் என அந்த்க் குழந்தைகளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
சண்.சிவா பேசுகையில் மலர் டிவியின் வாசகர் கலை விழாவில், இத்தனை மலர்களின்
இசை மணம் நெஞ்சம் முழுக்க நிரம்பிவிட்டது. இவர்கள் ஞானப்பூக்கள். அத்தனை பேரும் அனைத்துக்
கருவிகளையும் வாசித்து பிரமிக்க வைத்துவிட்டனர். பிரமாண்ட இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் விட இவர்கள் நமக்களித்த இன்பம் ஈடில்லாதது. இது மலர் டிவியின்
வாசகர் விழா மட்டுமல்ல, வாசம் மிக்க ஞானப் பூக்களின் விழா என்று தெரிவித்தார். இவர்களைப் போன்ற கலைஞர்களை
அடையாளப்படுத்தி, நாடு முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான்
ஓம்ஸ் பா.தியாகராஜன் ஐயாவின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக எப்போதும் தனது ஆதரவை
வழங்க அவர் தயாராகவே இருக்கிறார் என்று சண்.சிவா கூறினார்.
நிகழ்வில் மூத்த கலைஞர்கள் சண்முகநாதன், மேகநாதன், ஜெயந்தி, எம்.எஸ்.பிரிட்டோ ஆகியோரும் பங்கேற்று சாதனைச் சிறுவர்களின் இசையமைப்பில் பாடி அசத்தினர். நிகழ்வை வி.குமார் தொகுத்து வழங்கினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



